ஷ்ருதி புகைப்படங்கள்: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

ஷ்ருதி புகைப்படங்கள்: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

1 mins read
14bba153-2d06-49ee-b4ec-110a4857d33c
ஷ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள். -

ஷ்ரு­தி ­ஹா­சன் தனது சமூக ஊட­கப் பக்­கத்­தில் பகிர்ந்­துள்ள சில புகைப்­ப­டங்­க­ளைப் பார்த்து ரசி­கர்­கள் அதிர்ந்து போயுள்­ள­னர்.

அந்­தப் படங்­களில் அவ­ரது முகம் வீங்­கிய நிலை­யில் காணப்­படு­கிறது.

"மோச­மான சிகை­ய­லங்­கா­ரம், கடும் காய்ச்­சல்.. சைனஸ் பாதிப்­பால் வீங்­கிப்­போன முகம். மாத­விடாய் நாள்­கள்... மேலும் சில விஷ­யங்­கள்," என்று பதி­விட்­டுள்­ளார் ஷ்ருதி.

மேலும், தமது அண்மைய புகைப்படங்களையும் ரசிகர்களால் ரசிக்க முடியும் எனத் தாம் நம்புவ தாகக் குறிப்பிட்டுள்ளார்.

திடீ­ரென தனிப்­பட்ட விஷ­யங்­களை வெளிப்­ப­டை­யா­கக் குறிப்­பிட்­டுள்­ள­தை­யும் புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ள­தை­யும் கண்டு ரசி­கர்­கள் குழப்­பத்­துக்கு ஆளாகி உள்­ள­னர்.

ஷ்ரு­திக்கு தமி­ழில் வாய்ப்­பு­கள் இல்லை என்­றா­லும் தெலுங்­கில் பிர­பாஸ் ஜோடி­யாக 'சலார்' படத்­தில் நடித்து வரு­கி­றார்.

மேலும் சிரஞ்­சீ­வி­யு­டன் நடித்­துள்ள 'வால்­டர் வீரய்யா', பால­கிருஷ்­ணா­வு­டன் நடித்­துள்ள 'வீர சிம்மா ரெட்டி' படங்­கள் அடுத்த ஆண்டு பொங்­கல் பண்­டிகை­யின்­போது வெளி­யீடு காண உள்ளன. மேலும், தனி இசைத் தொகுப்பு பணிகளிலும் அவர் தீவிர கவனம் செலுத்தி உள்ளார்.

அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் கணிசமான நேரத்தைச் செலவிட்டு வருகிறார் ஷ்ருதி ஹாசன். ரசிகர்களுடன் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.