நடிகர் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பிறகு மஞ்சிமா தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை.
மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற 'திரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது. இதிலும் மீனா தான் நாயகியாக நடிக்க உள்ளார். 'திரிஷ்யம்' படத்தை தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் உருவாக்கி, கமல் நாயகனாக நடித்தி ருந்தார். இப்போது உருவாகும் மூன்றாம் பாகத்தை மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியிட உள்ளனர். "மூன்றாம் பாகத்துக்கான இறுதிக் காட்சிகளை வசனங்களுடன் எழுதி முடித்துள்ளேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்," என இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தெரிவித்துள்ளார். மூன்றாம் பாகத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாகச் சொல்கிறார் மீனா.
தாம் கதாநாயகனாக நடிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, புதுப் படங்களுக்கு விளம்பரம் செய்யப்படுவதை கண்டித்துள்ளார் யோகி பாபு. அவரது நடிப்பில் 'தாதா', 'பூமர் அங்கிள்' ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில், யோகி பாபு நடிக்கும் 'தாதா' படம் என விளம்பரப்படுத்தி சமூக ஊடகங்களில் சில சுவ ரொட்டிகளை வெளியிட்டுள் ளனர். இதனால் யோகிபாபு எரிச்சலாகிவிட்டாராம்.
"இந்தப் படத்தில் நான் நாயகன் அல்ல. நிதின் சத்யா நாயகனாகவும் நான் அவரது நண்பராகவும் நடித்துள்ளோம். எனவே இந்தச் சுவரொட்டியை நம்பாதீர்கள் மக்களே," என டுவிட்டரில் தெரிவித்துள்ளார் யோகி பாபு.
இதற்கிடையே 'பூமர் அங்கிள்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
விஷ்ணு விஷால் மீண்டும் நகைச்சுவை தூக்கலாக உள்ள கதையில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல். இதில் யோகிபாபுவும் அவருடன் இணைய உள்ளார்.