திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read
6a0148d2-5d91-4ee1-bd67-208606df906b
-
Google News Preferred Icon

 தெலுங்கில் உருவாகி வரும் '18 பேஜஸ்' என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளார் நடிகர் சிம்பு. இந்தப் படத்தில் நிகில் சித்தார்த், அனுபமா இணைந்து நடித்துள்ளனர்.

தெலுங்கில் அவர் பாடும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

 காலஞ்சென்ற நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா'

படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் வகையில் மதுரையில் இப்படம் திரையிடப்பட்டது. ஏராளமானோர் இப்படத்தைக் கண்டு ரசித்தனர். மேலும், சிவாஜி கணேசன் குறித்த பல்வேறு தகவல்களை இந்நிகழ்வில் பங்கேற்ற பிரமுகர்கள் பகிர்ந்துகொண்டனர்.