உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, சிறப்பு சிகிச்சை பெறுவதற்காக தென்கொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது உடல்நிலை குறித்து அண்மை யில் சமந்தா சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். மேலும் உருக்கமான பேட்டி ஒன்றும் அளித்திருந்தார். தமக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரை வில் மீண்டுவர முடியும் எனும் நம்பிக்கை உள்ளதாகவும் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியிருந்தார் சமந்தா. மும்பையில் சிறப்புச் சிகிச்சை, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சைகளை அவர் பெற்று வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் தென்கொரியா செல்ல இருப்பதாக புதுத் தகவல் தெரிவிக்கிறது. தசை அழற்சி நோய்க்கு அங்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என நெருக்கமான சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனராம்.
தென்கொரியா செல்கிறார் சமந்தா
1 mins read
-

