தவறான விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது மனம் வேதனைப்படுகிறது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் விரிவாகப் பேசியுள்ள அவர், என் மீதான சில குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றபோதிலும், அவற்றுக்கு விளக்கம் அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
'சில விஷயங்களை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வேதனைப்படுகிறேன். சில சமயங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடிவதில்லை.
"தவறான விமர்சனங்கள் என்றாலும் அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
"நான் பேசாத விஷயங்களை முன்வைத்து என்னை விமர்சிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் காணப்படும் இதுபோன்ற பதிவுகள் என்னை மிகவும் வேதனைப்படுத்துகின்றன," என்கிறார் ராஷ்மிகா.
தவறான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் காரணமாக தமது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமது நலன் விரும்பிகள் கவலைப்படுவதும் வேதனை தருகிறது என்கிறார்.
"என்னை நான் மெருகேற்றிக்கொள்ள நல்ல விமர்சனங்களை எப்பொழுதும் வரவேற்கிறேன்," என்கிறார் ராஷ்மிகா.

