இயக்குநர் ராஜமௌலிக்கு நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்த அமைப்பில் செய்தியாளர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 88 ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்துக்காக ராஜமௌலிக்கு சிறந்த இயக்குநருக்கான விருதை அந்த அமைப்பு அறிவித்ததை அடுத்து, ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது.
இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், அப்படத்தை இயக்கிய ராஜமௌலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. எனினும், சர்ச்சையைக் கடந்து திரையுலகத்தினர் பலரும் ராஜ மௌலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
, :