தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'துணிவு இருந்தால்தான் சாதிக்க முடியும்'

2 mins read
b48099a2-8958-4272-bec5-4bb296903a59
-

இயக்­கு­நர் ராம் இயக்­கத்­தில் உரு­வாகும் 'ஃபால்' என்ற இணை­யத்­தொ­ட­ரில் நடித்­துள்­ளார் அஞ்­சலி.

பிற மொழி­களில் அதிக வாய்ப்பு­கள் தேடி ­வ­ரு­வ­தால், தமி­ழில் புது வாய்ப்­பு­களை ஏற்க முடி­ய­வில்லை என்­றும் இயக்­கு­நர் ராமு­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­தன் மூலம் திரை­யு­ல­கம் சார்ந்த பல்­வேறு நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக் கொள்ள முடிந்­தது என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் திரைப்­ப­டங்­களை இயக்க விருப்­பம் கொண்­டுள்­ள­தாக அண்­மை­யில் வெளி­யான தக­வல் உண்­மை­யல்ல. நான் தொடர்ந்து நடி­கை­யாக இருக்­கவே விரும்­பு­கி­றேன். படத்தை இயக்­கு­வ­திலோ, தயா­ரிப்­ப­திலோ விருப்­பம் இல்லை.

"இயக்­கு­நர் ராம் சிறந்த ஆசி­ரி­யர் என்­பேன். அவ­ரது மாணவி என்று சொல்­லிக்­கொள்­வ­தில் பெருமை அடை­கி­றேன். அவரு­டன் பணி­யாற்­றும் ஒவ்­வொரு நாளும் ஏதே­னும் ஒரு விஷயத்­தைக் கற்க முடி­யும்.

"புதி­தாக நடிக்க வரு­பவர்­கள் கொஞ்­சம் துணிச்­ச­லு­டன் செயல்­பட வேண்­டும். கொஞ்­சம் பல­வீ­ன­மாக இருந்­தா­லும் தாக்­குப்­பி­டிக்க இய­லாது. நல்லதோ கெட்­டதோ எதை­யும் துணிச்சலு­டன் எதிர்­கொள்ள வேண்­டும்," என்கிறார் அஞ்சலி.

காதல் என்பது அழகான ஓர் உணர்வு என்று குறிப்பிடுபவர், எத்தகைய காதல் என்பதைப் பொறுத்தே ஒருவரது மகிழ்ச்சி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்.

திருமணம் குறித்து இப்போதைக்கு அஞ்சலி ஏதும் யோசிக்கவில்லையாம். காதலையும் திருமணத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அதுபோன்ற தகவல்களை நிச்சயம் வெளிப்படையாக அறிவிப்பதில் தயக்கம் ஏதுமில்லை என்றும் சொல்கிறார்.

"எந்த இயக்குநரின் படங்களில் நடிக்க வேண்டும், எந்த நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை.

"என்னைத் தேடி வரும் கதைகளில் எது சிறப்பாக இருப்பதாகக் கருதுகிறேனோ, அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

"எனது திறமையை வெளிப்படுத்து வதற்கான வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் சாதிக்க முடியும். அதேசமயம் அத்தகைய வாய்ப்புகளைத் தேடிச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

"அனைத்தும் இயல்பாக நடக்க வேண்டும்," என்று சொல்லும் அஞ்சலி, தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழிலும் நல்ல கதைகளுக்காகக் காத்திருக்கிறார்.