மகிமா: தவிப்புக்கு ஆளானேன்

‘நாடு’ படத்­தில் நடித்­த­போது பல்­வேறு சுவா­ர­சி­ய­மான, திகி­லான, அச்­ச­மூட்­டும் அனு­ப­வங்­க­ளைப் பெற்­ற­தாகச் சொல்­கி­றார் நடிகை மகிமா நம்­பி­யார்.

அது­மட்­டு­மல்ல, வனப்­ப­கு­தி­யில் கால்­க­ளைப் பதம்பார்க்­கும் கூரான முட்­கள் நிறைந்த இடங்களில் காட்­சி­களை எடுத்­த­போது மிக­வும் சிர­மப்­பட்டு நடித்­த­தா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

இப்­ப­டத்­துக்­கான முக்­கிய காட்­சி­களை தமிழகத்­தில் உள்ள கொல்லி மலை­யில் பட­மாக்கி உள்­ள­னர். காலை­யில் நில­வும் குளிர், திடீ­ரென சுட்டெ­ரிக்­கும் வெயில், இரவு வீசும் பனிக்­காற்று என்று சூழ்­நிலை சவால் நிறைந்­த­தாக இருந்­தது என்கி­றார் மகிமா.

“நான் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரத்­துக்­கான ஒப்­பனை­யைப் போட்­டுக்­கொள்ள சுமார் இரண்­டரை மணி நேர­மா­கும். தின­மும் அதி­காலை நான்கு மணிக்­கெல்­லாம் கண்­வி­ழித்து, ஒப்­பனைக்­குத் தயா­ரா­கி­வி­டு­வேன்.

“கொல்லி மலைக்­குச் சென்ற முதல்­நாள், அங்கு நில­வும் காலநிலை மன­தைக் கொள்ளைகொண்­டது. குறிப்­பாக, காலைப் பொழுது மிக ரம்­மி­ய­மாக இருக்­கும். குளி­ருக்கு மத்­தி­யில் மெது­நடை மேற்­கொண்­ட­போது, உற்சா­கத்­தின் உச்­சிக்குச் சென்­றேன்.

“எனி­னும் சில நாள்­க­ளுக்­குப் பிற­கு­தான் பிரச்­சி­னை­கள் உரு­வா­கத் தொடங்­கின. படக்­கு­ழு­வில் இருந்த பல­ருக்கு கடுங்­கு­ளிர் கார­ண­மாக உடல் சரு­மம் உலர்ந்­து­விட்­டது. அதன் கார­ண­மாக ஒப்­பனை செய்­வ­தில் சிர­மங்­கள் ஏற்­பட்டன.

“இத­னால் முகத்­தில் ஆங்­காங்கே வெடிப்­பு­கள் இருப்­ப­து­போல் தோற்­ற­ம­ளித்­தேன். இதை ஒளிப்­பதி­வா­ளர்­தான் முத­லில் கவ­னித்­தார்.

“முகத்­தில் ஈரப்­பதம் இருக்க வேண்­டும் என்­ப­தால் படக்­கு­ழு­வைச் சேர்ந்த பல­ரும் பல­வி­த­மான யோச­னை­க­ளைக் கூறி­னர். அவை ஓர­ளவு கைகொ­டுத்­தன. எனி­னும் ஒரு திடீர் விபத்­தால் எனது முக அழகு பாதிப்புக்கு ஆளா­னது. அத­னால் மிரண்டு போனேன்,” என்கிறார் மகிமா.

அப்­படி என்ன நடந்­து­விட்­டது?

ஒரு­நாள் சிகை­ய­லங்­கா­ரம் செய்துகொண்­ட­போது, ஒப்­ப­னை­யா­ளர் பயன்­ப­டுத்­திய சிறிய ரக விசிறி (டிரை­யர்) போன்ற கரு­வி­யில் இருந்து வெளிப்­பட்ட சூடான காற்று இவ­ரது கன்­னத்­தைப் பதம் பார்த்­து­விட்­ட­தாம். தீக்­கா­யத்­தால் ஏற்­பட்ட வடு­போல் காட்­சி­ய­ளித்­த­தால் முக அழகு பாதிக்­கப்­படும் எனக் கவ­லைகொண்­டா­ராம்.

அதன் பிறகு சென்­னை­யில் உள்ள தனது மருத்­து­வ­ரைத் தொடர்புகொண்டு பேச, அவர் பரிந்­து­ரைத்த மருந்­து­களை வர­வ­ழைத்து சாப்­பிட்ட பிற­கு­தான் எல்­லாம் சரி­யா­னது என்கிறார்.

“இரு நாள்­க­ளுக்­குப் பிறகு மருந்­து­கள் வந்து சேர்ந்­தன. கன்­னத்­தில் ஏற்­பட்ட காயம் ஆறிய பிற­கு­தான் மற்ற பணி­களில் கவ­னம் செலுத்த முடிந்­தது.

“ஒரு நடி­கைக்­கு முக அழ­கும் புறத் தோற்­ற­மும் எவ்­வ­ளவு முக்­கி­யம் என்­பது எல்­லா­ருக்­கும் தெரி­யும். அத­னால்­தான் கவ­லைப்­பட்­டேன். அந்த வகை­யில் கொல்­லி­மலை அனு­பவத்தை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது,” என்று சொல்­லும் மகிமா, தமி­ழில் ‘நாடு’ போன்ற நல்ல கதைக்களம் உள்ள படங்­களை மட்­டுமே தேர்வு செய்து நடிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

கதைக்­காக உடலை வருத்­திக்­கொண்டு நடிப்­ப­தில் தனக்கு தயக்­கம் ஏதும் இல்லை என்று குறிப்­பி­டு­பவர், சவா­லான கதா­பாத்­தி­ரங்­கள்­தான் ரசி­கர்­கள் மன­தில் நிலை­யான இடத்­தைப் பெற்­றுத் தரும் என்­கி­றார்.

“குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில் குட்­டைப் பாவாடை­யும் முகக்­கண்­ணா­டி­யும் அணிந்து ஒய்­யா­ர­மாக (ஸ்டைலாக) நடந்து வரவேண்­டும் என்று இயக்கு­நர் கூறி­னார். காட்­டுப்பகு­தி­யில் நான் அவ்­வாறு நடந்து வரவேண்­டிய இடத்­தில் ஏரா­ள­மான முட்­செ­டி­கள் இருப்­பதை அவர் முத­லில் கவ­னிக்­க­வில்லை.

“ஓரடி எடுத்து வைப்­ப­தற்­குள் பத்து முட்­செ­டி­கள் என் கால்­களில் உர­சின. முள் கீறி­ய­தால் அடுத்­த­டுத்த அடிகளை எடுத்து வைக்க சிர­மப்­பட்­டேன். எனி­னும் எதை­யும் வெளிக்­காட்­டா­மல் அந்­தக் காட்­சி­யில் நடித்து முடித்­தேன்.

“அதன் பிற­கு­தான் என்ன பிரச்­சினை என்­பதை இயக்­கு­நர் தெரிந்­து­கொண்­டார். ஒட்­டு­மொத்த படக்­குழு­வி­ன­ரும் எனது செய­லைக் கைதட்­டிப் பாராட்டினர். அது பத்து விரு­து­க­ளுக்­குச் சம­மா­னது. ரசிகர்களின் ஆதரவும் பாராட்டுகளும் என்னை வழிநடத்துகின்றன,” என்­கி­றார் மகிமா நம்பியார்.

, :

  

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!