எந்தவித பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் தாம் தனித்து மேற்கொண்ட பயணம் இருபது ஆண்டு களை நெருங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் நடிகர் பரத்.
வெற்றி, தோல்விகளை சமமாகக் கருதுவதால்தான் இந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வசந்தபாலன் இயக்கும் 'முன்னறிவான்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் பரத். மேலும், இரண்டு இணையத் தொடர்களிலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.