ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'தமிழரசன்'

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'தமிழரசன்'

1 mins read
0d78990b-8a8b-4218-b357-f6c330b71b0b
-

விஜய் ஆண்­டனி நடித்­துள்ள 'தமி­ழ­ர­சன்' படத்­தின் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பு வெளி­யாகி உள்­ளது.

தற்­போது 'அக்னி சிற­கு­கள்', 'காக்கி', 'தமி­ழ­ர­சன்', 'பிச்­சைக்­கா­ரன்-2', 'கோடி­யில் ஒரு­வன்', 'கொலை', 'மழை பிடிக்­காத மனிதன்', 'வள்ளி மயில்' உள்­ளிட்ட படங்­களை கைவ­சம் வைத்­துள்­ளார் விஜய் ஆண்­டனி.

இந்த நிலை­யில் இயக்­கு­நர் பாபு யோகேஸ்­வ­ரன் இயக்­கத்­தில் அவர் நடித்­துள்ள 'தமி­ழ­ர­சன்' திரைப்­ப­டம் விரை­வில் வெளி­யாக உள்­ளது. இதை யடுத்து ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்பு­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

"எப்­போ­தும் வித்­தி­யா­ச­மான கதைக்களங்­களை தேர்வு செய்­பவர் விஜய் ஆண்­டனி. அதனால் ஒவ்­வொரு படத்­தி­லும் சமூ­கத்துக்குத் தேவை­யான நல்ல கருத்து­களை முன்­வைப்­பார் என்று ரசி­கர்­கள் நம்­பு­கின்­ற­னர். அத­னால்­தான் 'தமி­ழ­ர­சன்' படமும் அவர்­க­ளி­டம் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"இந்­தப் படத்­தில் ரம்யா நம்­பீ­சன் நாய­கி­யாக நடித்­துள்­ளார். மேலும், மலை­யாள நடி­கர் சுரேஷ் கோபி, பாலி­வுட் நடி­கர் சோனு சூட், யோகி பாபு, சங்­கீதா உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ள­னர். இப் படத்­திற்கு இளை­ய­ராஜா இசை­அமைத்­துள்­ளார் என்பது மிகப் பெரும் பலம்," என்­கி­றார் இயக்கு­நர் பாபு யோகேஸ்­வ­ரன்.