ரசிகர்களின் நலன் கருதி கொண்டாட்டத்திற்கு தடைபோட்ட ரஜினி

ரசிகர்களின் நலன் கருதி கொண்டாட்டத்திற்கு தடைபோட்ட ரஜினி

3 mins read

தமிழ்­நாட்­டில் 'மாண்­டஸ்' புயலைத் தொடர்ந்து கன மழை பெய்து வரு­கிறது. மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் தன்­னு­டைய ரசி­கர்­கள் தனக்கு பிறந்­த­நாள் வாழ்த்­து­க­ளைக் கூற வரு­வார்­கள். அவர்­களை எப்­ப­டித் தடுத்­தா­லும் கேட்­க­மாட்­டார்­கள் என்ப­தால் கேளம்­பாக்­கத்­தில் உள்ள தனது பண்ணை வீட்­டில் பேரன்­க­ளோடு தங்கிவிட்­டார் ரஜினி. ரசி­கர்­கள் மீது இருந்த அக்­க­றை­யால் தனது பிறந்த­நாள் அன்று குடும்­பத்­

து­டன் பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டா­மல் மறு­நாள் பேரப்­பிள்­ளை­க­ளு­டன் கேக் வெட்டி கொண்­டா­டி­னார்.

ரஜி­னி­யின் பிறந்­த­நாளை முன்­னிட்டு முதல்­வர், அர­சி­யல் தலை­வர்­கள், திரைப்­பி­ர­ப­லங்­கள், ரசி­கர்­கள் உள்­ளிட்ட பல­ரும் வாழ்த்து தெரி­வித்­த­னர். அதி­கா­லை­யில் இருந்தே அவர் வீட்­டின் முன்பு கூடிய ரசி­கர்­களை, லதா ரஜி­னி­காந்த் நன்றி கூறி, திருப்பி அனுப்­பி­னார். அவ­ரது வீட்டு முன்பு கூடிய ரசி­கர்­கள் அவர் இல்­லாத காரணத்­தால் ஏமாற்­றத்­து­டன் திரும்பிச் சென்­ற­னர். சிலர் கண்­ணீ­ருடன் சென்றனர்.

இந்­நி­லை­யில் தனக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­வர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார் ரஜினி. இது­

தொ­டர்­பாக அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், "எனக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்த இனிய நண்­ப­ரும் தமி­ழக முதல்­வ­ரு­மான ஸ்டா­லின், திரைப் பிர­ப­லங்­கள், அர­சி­யல் பிர­ப­லங்­கள், பொது மக்­கள், ஊடக நண்­பர்­கள், என்னை வாழவைக்­கும் தெய்­வங்­க­ளான ரசி­கர்­கள், தமி­ழக மக்­கள் அனை­வ­ருக்­கும் எனது மன­மார்ந்த நன்­றியைத் தெரி­வித்­துக்கொள்­

கி­றேன்," என தெரி­வித்­துள்­ளார்.

ரஜி­னி­காந்த் தற்­பொ­ழுது நடித்து வரும் படம் 'ஜெயி­லர்'. அவ­ரது பிறந்­த­நாளை முன்­னிட்டு இயக்­கு­நர் நெல்­சன், "இந்­தப் படத்­தில் ரஜி­னி­காந்த் முத்­து­வேல் பாண்­டி­யன் என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார்," என்று அறி­வித்­த­தோடு ஒரு காணொ­ளி­யை­யும் வெளி­யிட்டு இருந்­தார்.

அந்­தக் காணொ­ளி­யில் வய­தான தோற்­றத்­தில் காணப்­படும் ரஜினி 'கோட்', 'சூட்', கண்­ணாடி சகி­த­மாக உட­லில் நறு­ம­ணம் வீசும் திர­வி­யத்தை அடித்­துக்­கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு பட்­டாக் கத்­தியை எடுப்­பது போன்று வெளி­யா­னது. இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு தற்­போது மும்­மு­ர­மாக நடந்து வரு­கிறது.

அவ­ரின் பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டும் வகை­யில் ரஜி­னி­காந்த் 20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடித்த 'பாபா' படத்தை டிஜிட்­டல் தொழில்­நுட்­பத்­திற்கு மாற்றி, சில காட்­சி­க­ளைக் குறைத்து வெளி­யிட்டு இருந்­த­னர்.

இதற்கு ரஜினி ரசி­கர்­கள் அமோக வர­வேற்பு கொடுத்து வரு­கி­றார்­கள். மேலும், இந்த 'பாபா' படத்­தில் பல காட்­சி­கள் கத்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இந்த படத்­தில் ரஜி­னிக்கு 7 வரங்­கள் கொடுக்­கப்­பட்டு அதை ஒவ்­வொன்­றாக பரிசோதித்து வரு­வார். ஆனால் இந்த 'டிஜிட்­டல் பாபா'­வில் ஐந்து வரங்­கள் மட்­டுமே கொடுக்­கப்­ப­டு­கிறது. அத­னால் ரம்யா கிருஷ்­ணன், ஜப்­பான் பெண்­ணுக்கு உதவி செய்ய ரஜினி உச்­ச­ரிக்­கும் மந்­தி­

ர­ங்கள் வெட்­டப்­பட்டு உள்­ளன. அதோடு இறு­திக் காட்­சி­யில் பாபா­வுக்கு மறு ஜென்­மம் கொடுக்­கப்­ப­டு­வது போல் காட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன. அதைப் பார்த்த ரஜினி ரசி­கர்­கள் கொண்­டாடி வரு­கி­றார்­கள்.

இதற்­கி­டை­யில் ரஜினி சென்­னை­யில் வாய்ப்­புத் தேடி அலைந்து கொண்­டி­ருந்­த­போது ஓர் உண­வ­கத்­தில் வேலை செய்த நாரா­யண ராவ் என்­ப­வர் ரஜி­னி­யின் நிலையை அறிந்து அவர் கொடுக்­கும் காசிற்கு அதி­க­மா­கவே தின­மும் உணவு கொடுப்­பா­ராம்.

சில நேரங்­களில் கையில் பண­மில்­லாதபோது, பணம் வாங்­கா­ம­லேயே சாப்­பாடு கொடுத்­தி­ருக்­கி­றார். இது பற்றி கடை உரி­மை­யா­ளர் கேட்­ட­போது "என்­னு­டைய சம்­ப­ளத்­தில் எடுத்­துக்­கொள்­ளுங்­கள்," என்று கூறி­யி­ருக்­கி­றார். இப்­ப­டியே பல நாள்­கள் ரஜி­னிக்­குச் சாப்­பாடு போட்டு வந்­தி­ருக்­கி­றார் நாரா­ய­ண­ராவ்.

பின்­னர் ரஜினி திரை­யு­ல­கில் முன்­னணி நடி­க­ரா­னார். சில

ஆண்­டு­க­ளுக்கு முன்பு தனக்கு உத­வி­யாக இருந்த நாரா­ய­ண­ ராவைத் தேடி, அவ­ரது குடும்ப நிலையை விசா­ரித்­துத் தெரிந்­து­கொண்ட ரஜி­னி­காந்த், அவரை நேரில் சென்று பார்த்து, அவர் பெய­ரில் பெரிய தொகை ஒன்றை வங்­கி­யில் போட்டு அதன் மூலம் கிடைக்­கும் வட்டித் தொகை குடும்ப செலவிற்கு கிடைக்கும்படி செய்­தி­ருக்­கி­றார்.

மேலும், அவ­ரது மக­னுக்­குத் தனக்கு தெரிந்த தொழில்­நுட்­பக் கம்­பெ­னி­யில் வேலை­யும் வாங்கிக் கொடுத்­தி­ருப்­ப­தாகக் கூறப்­

ப­டு­கிறது.