தமிழ்த் திரையில் திறமையான வர் என குறுகிய காலத்தில் பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர் நாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் வியாபார ரீதியிலும் விமர்சன ரீதியிலும் அவருக்கு நற்பெயரை அதிகமாகப் பெற்றுத் தரவில்லை.
அதிலும் இரண்டு வாரங்
களுக்கு முன்பு வெளிவந்த 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி எப்படி நடித்தார் என்று ரசிகர்களும் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அந்தப் படத்தில் 'டிஎஸ்பி' கதாபாத்திரத்திற்குப் பொருத்தம் இல்லாத விதத்தில் அவரது உடல் தோற்றம் சற்றே குண்டாக இருந்ததையும் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டகிராமில் 'மிரர் செஃல்பி' ஒன்றை விஜய் சேதுபதி பதிவிட்டிருந்தார். அதில் உடல் இளைத்து, இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார் அவர். அவரது பதிவிற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்கள் கிடைத்துள்ளன. தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் விஜய் சேதுபதி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

