தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் படம் 'பதான்'. இந்தப் படம் 2023ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி 'பான் இந்தியா' படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 'பதான்' திரைப்படத்தின் 'அழையா மழை' பாடல் காணொளியாக வெளியாகி இணையத்தில் பரவியது.
இந்தப் பாடலில் தீபிகா ஷாருக்கானுடன் நீச்சலுடையில் கவர்ச்சியாக நடித்து உள்ளார். பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது எதிர்மறையான கருத்துகளும் பரவி வருகின்றன.
பலர் இந்தப் பாடல் ஆபாசமாக உள்ளது என்றும் இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற காட்சிகள் இருப்பதால் வழக்கத்திற்கு மாறாக 50 விழுக்காடு கூடுதல் சம்பளமாக ரூ.15 கோடி சம்பளம் தீபிகா படுகோன் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்ச்சி உடையில் நடனமாடுவதற்காக தீபிகா படுகோன் சம்பளத்தை உயர்த்திஉள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

