லோகேஷ்: 'ரோலக்ஸ்' வருவது உறுதி

லோகேஷ்: 'ரோலக்ஸ்' வருவது உறுதி

1 mins read
40f75616-bf8d-4089-8b87-e3fbb50b1286
-

'விக்­ரம்' படத்­தில் இடம்­பெற்ற 'ரோலக்ஸ்' கதா­பாத்­தி­ரத்தை வைத்து தனிப்­ப­டத்தை இயக்கப் போவ­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ்.

இத்­த­க­வல் நடி­கர் சூர்­யா­வின் ரசி­கர்­களை உற்­சா­கத்­தில் ஆழ்த்தி உள்­ளது.

'ரோலக்ஸ்' என்ற எதிர்­மறை கதா­பாத்­தி­ரத்­தில் சூர்­யா­வின் நடிப்பு அபா­ர­மாக இருந்­த­தாக கமல் உட்­பட ஏரா­ள­மா­னோர் பாராட்டு தெரி­வித்­த­னர்.

இத்­த­னைக்­கும் படத்­தின் இறு­திப் பகு­தி­யில் சில நிமிடங்­கள் மட்­டுமே வந்து போவார் சூர்யா. அந்­தக் குறு­கிய காலத்­துக்­குள் ரசி­கர்­க­ளி­டம் கை­தட்டல் பெறும் வகை­யில் அவ­ரது நடிப்பு சிறப்­பாக இருந்­தது.

இந்­நி­லை­யில் தமது அண்­மைய பேட்­டி­யில் 'ரோலக்ஸ்' கதா­பாத்­தி­ரத்தை மைய­மாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவ­தாக லோகேஷ் கூறி உள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.