'தசை அழற்சி' நோய்க்காக பெற்று வரும் சிகிச்சை இன்னும் நிறைவடையாததால் படப்பிடிப்பில் பங்கேற்பதை ஒத்தி வைத்துள்ளார் சமந்தா. அவர் தற்போது தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவின் ஜோடியாக 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவுக்காக காத்திருப்பது என அப்படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா முழுமையாக நலமடைந்துள்ளார். இதையடுத்து, தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் படப்பிடிப்பில் அவர் மீண்டும் பங்கேற்றுள்ளார். அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

