'அஜித் பற்றி சொன்னதை மறைத்துவிட்டனர்'

'அஜித் பற்றி சொன்னதை மறைத்துவிட்டனர்'

2 mins read
5079afb7-fe65-46b7-a9fb-beac077b9e13
-

தாம் அஜித் குறித்து தவ­றாக ஏதும் பேச­வில்லை என்­றும் அவ­ரைப் பற்றி தாம் கூறிய நல்ல விஷ­யங்­களை ஊட­கங்­கள் மறைத்­து­விட்­ட­தா­க­வும் சொல்­கி­றார் 'வாரிசு' படத்­தின் தயா­ரிப்­பா­ளர் 'தில்' ராஜு.

இவர் அண்­மைய பேட்டி ஒன்­றில், தமிழ்த் திரை­யு­ல­கின் முதல் நிலை நடி­கர் என்­றால் அது விஜய்தான் என்­றும் அஜித்­துக்கு இரண்­டாம் இடம்­தான் என்­றும் குறிப்­பிட்­டி­ருந்தது சர்ச்­சை­யாகி உள்­ளது.

சமூக ஊட­கங்­களில் அஜித், விஜய் ரசி­கர்­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­ற­னர். 'வாரிசு', 'துணிவு' படங்­கள் வெளி­யா­கும்­வரை இந்த விமர்­ச­னங்­களும் கருத்து மோதல்­களும் நிற்பதற்­கான அறி­கு­றி­கள் தெரி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், தாம் தெரி­வித்த கருத்­து­கள் குறித்து தயா­ரிப்­பா­ளர் தில் ராஜு விளக்­கம் அளித்­துள்ளார்.

"ஒரு விளம்­பர நிகழ்­வில் கலந்து கொண்டு கிட்­டத்­தட்ட முக்­கால் மணி நேரம் நான் பேசி­னேன். குறிப்­பாக அஜித், விஜய் ஆகிய இரு­வர் குறித்­தும் பல்­வேறு நல்ல விஷ­யங்­களைக் குறிப்­பிட்­டேன்.

"ஆனால் நான் பேசி­ய­தில் இருபது விநா­டி­கள் மட்­டுமே கொண்ட சிறு காணொ­ளிப் பகுதியை மட்­டும் வெட்டி எடுத்துத் தனி­யாக வெளி­யிட்­டுள்­ள­னர்.

"இதன் மூலம் சமூக ஊட­கங்­களில் 'வாரிசு' படத்­துக்கு எதி­ராக சிலர் செயல்­பட்டு வரு­கின்­றனர். எனது முழுப் பேச்­சை­யும் கவனித்தால்­தான் நான் சொல்­வது எவ்­வ­ளவு உண்மை என்­பது தெரி­ய­வ­ரும்," என்­கி­றார் தில் ராஜு.

இதற்­கி­டையே 'துணிவு', 'வாரிசு' படங்­க­ளுக்கு தமி­ழ­கத்­தில் சம அளவி­லான திரை­ய­ரங்­கு­கள் ஒதுக்­கப்­படும் என தமி­ழக திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் சங்­கத் தலை­வர் திருப்­பூர் சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார். மேலும், ஒரு படத்­தின் வெற்­றியை நடி­கர்­கள் மட்­டுமே தீர்­மா­னிப்பதில்லை என்­றும் நல்ல கதை­தான் வெற்­றியை உறுதி செய்­யும் என­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

'வாரிசு' திரைப்­ப­டத்தை தெலுங்கு திரை­யு­ல­கைச் சேர்ந்த தில் ராஜுவும் 'துணிவு' திரைப்­ப­டத்தை இந்­தித் தயா­ரிப்­பா­ளர் போனி கபூ­ரும் தயாரித்­துள்­ள­னர்.

'துணிவு' திரைப்­ப­டத்தை தமி­ழ­கத்­தில் (ரெட் ஜெயண்ட் மூவீஸ்) உத­ய­நிதி ஸ்டா­லி­னும் 'வாரிசு' திரைப்­ப­டத்தை (செவன் ஸ்க்­ரீன் ஸ்டூ­டியோ) லலித் குமா­ரும் வெளி­யி­டு­கின்­ற­னர். மற்ற நாடு­களில் வெவ்­வேறு நிறு­வ­னங்­கள் வெளி யீட்டு உரி­மை­யைப் பெற்­றுள்­ளன.

எனவே இவ்­விரு நிறு­வ­னங்­களும் கலந்து பேசி, இப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வு காண வாய்ப்­புள்­ள­தாக கோடம்­பாக்­கப் பிர­மு­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்பு நில­வு­கிறது. இதற்­கி­டையே, அஜித்­தும் விஜய்­யும் தங்­கள் ரசி­கர்­கள் இடையே எந்­த­வித மோத­லும் ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்­ப­தில் கவ­ன­மாக இருப்­ப­தா­க­வும் அவர்­க­ளது தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.