முப்பது காட்சிகள் நீக்கம்

முப்பது காட்சிகள் நீக்கம்

1 mins read
382a2e73-7a97-4ed5-9014-2d83d24d66a4
-

திரிஷா நடிப்­பில் உரு­வாகி உள்ள 'ராங்கி' படம் நீண்ட தாம­தத்­துக்­குப் பின்­ வெளி­யீடு கண்­டுள்­ளது.

படம் பார்த்த தணிக்­கைக் குழு­வி­னர் முப்­பது காட்­சி­களை நீக்­கி­விட்­ட­ன­ராம். அத­னால்­தான் படம் வெளி­யா­வ­தில் தாம­தம் ஏற்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார் இயக்­குநர் எம்.சர­வ­ணன்.

"அமெ­ரிக்கா, டாலர், லிபியா, இந்­தி­யா­வின் 'ரா' உளவு அமைப்பு, எஃப்பிஐ உள்­ளிட்ட பெயர்­கள் இடம்­பெற்ற முப்­பது காட்­சி­க­ளைத்­தான் தணிக்­கைக் குழு­வி­னர் நீக்­கி­னர். அவற்றை எடுத்த பிறகே 'யு/ஏ' வகை­யில் தணிக்­கைச் சான்­றி­தழ் கிடைத்­தது. இதற்கு முன்பு வெளி­யான சில படங்­களில் இருந்த வார்த்­தை­க­ளையே நாங்­களும் பயன்­ப­டுத்­தி­னோம்.

"ஓர் இளம் பெண்­ணுக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­யில் அனைத்துலக குழுக்­க­ளுக்­குத் தொடர்பு இருப்­பது ­போன்று திரைக்­கதை அமைத்­துள்­ளோம். அத­னால்­தான் வெளி­நா­டு­க­ளு­டன் தொடர்­பு­டைய காட்சி­கள் இடம்­பெற்­றன," என்கிறார் சர­வ­ணன்.