திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

 சுமார் மூன்று ஆண்டு களுக்குப் பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் அனுஷ்கா. அவர் நடிக்கும் புதிய படத் துக்கு தற்காலிகமாக 'அனுஷ்கா 48' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் சமையல் கலைஞராக நடிக்கிறார் அனுஷ்கா. அவருக்கும் ஓர் இளையருக் கும் இடையே காதல் மலர்கிறது. அது கைகூடுகிறதா என்பதுதான் கதையாம். இந்தப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து நடிப்பது என அனுஷ்கா முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

 அவதூறு பதிவுகள் அதிகரித்து வருவதால் சமூக ஊடகங்களை விட்டு விலக முடிவு செய்துள்ளார் நடிகை டாப்சி. சமூகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக தாம் வெளிப்படையாகப் பேசுவது சில தரப்பினருக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர்கள்தான் தன்னைப் பற்றி மோசமாக விமர்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

"சில கலைஞர்கள் கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, அதன் பின்னால் நிற்கும்போதும் நடிக்கிறார்கள். எனக்கு அவ்வாறு செய்யத் தெரியாது. |நான் எப்போதும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறேன். இதன் காரணமாக பலர் என்னை விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. எனவே சமூக ஊடகங்களில் இருந்து விலகி நிற்க விரும்புகிறேன்," என்கிறார் டாப்சி.

 நம் தவறுகளை நாமே கண்டறிந்து திருத்திக் கொள்வதுதான் முன்னேற்றத் துக்கு வழிவகுக்கும் என்கிறார் சமந்தா. எப்போதுமே பணத்துக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அளவுக்கு மீறிய கோபம் வரும்போது உடற் பயிற்சிக் கூடத்துக்குச்

சென்று பலமணி நேரத்தைச் செலவிடுவாராம். இதன் மூலம் தனது கோபம் தணியும் என்கிறார். "நான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மனதார நேசிப்பேன். எனக்குப் பணத்தைவிட நான் சார்ந்துள்ள நடிப்புத் தொழில்தான் முக்கியம். நம் தவறுகளை நாமே திருத்திக் கொண்டால்தான் எந்தத் தொழிலாக இருந்தாலும் முன்னேற்றம் காண முடியும்," என்கிறார் சமந்தா.