நயன்தாரா நடிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படத்தில் இடைவேளை என்று எதுவும் இருக்காதாம். மொத்த படமும் சுமார் 99 நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது. அதனால் இடைவேளை தேவை இல்லை என முடிவெடுத்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் இதை ஏற்கவில்லை. இடைவேளை இல்லை என்றால் தங்களுக்கான லாபம் குறையும் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பொதுவாக படங்களின் இடைவேளியின் போது மக்கள் திரையரங்குகளில் உள்ள உணவகங்களில் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
"இது திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது என அவர்கள் கூறுகின்றனர்.
"அதன் காரணமாக இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
'கனெக்ட்' படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எதிர்வரும் 22ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
'கனெக்ட்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

