ரஜினி மகள் ஐஸ்வர்யா அடுத்து 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். அண்மையில் இப்படத்துக்கான பூசை நடைபெற்றது.
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் நாயகர்களாக நடிக்க உள்ளனர். ரஜினியும் கௌரவ வேடத்தில் நடிப்பார் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இது கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படமாம்.
ரஜினி தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருவதால், அந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட பின்னர்தான் 'லால் சலாம்' படப்பிடிப்பில் பங்கேற்பாராம். அநேகமாக அவர் அடுத்த பிப்ரவரி மாதம்தான் கால்ஷீட் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.
எனவே, அப்போதுதான் விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் தன் தந்தையுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளைப் படமாக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
விக்ராந்தும் விஷ்ணு விஷாலும் நல்ல அனுபவம் உள்ள கிரிக்கெட் வீரர்கள். தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலும்கூட பங்கேற்றுள்ள னர். எனவேதான் அவர்கள் இரு வரையும் தேர்வு செய்துள்ளார் ஐஸ்வர்யா.
இருவரும் பொருத்தமான தேர்வு என ரஜினியும்கூட தன் மகளைப் பாராட்டினாராம்.
எனினும், ஐஸ்வர்யா தரப்பில் இருந்து படப்பிடிப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
(இடமிருந்து வலம்) ஐஸ்வர்யா, விக்ராந்த், ரஜினி, விஷ்ணு விஷால்.

