அண்மைக் காலமாக ஒரு படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் முன்கூட்டியே வெளியிடப்படும் பாடல்களுமே பாதி வெற்றியைத் தீர்மானித்து விடுகின்றன.
இவற்றை எத்தனை மில்லியன் பேர் பார்வையிடுகிறார்கள் என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.
பாடல் வெளியீட்டுக்கு இணையாக முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டுக்கும் பெரிய விழாவை நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டில் சில முன்னணி நாயகர்களின் படங்களின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்குக்கூட வரவேற்பு கிடைக்காமல் போனது. அதே சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் 'பீஸ்ட்' படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பை சுமார் 59 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 'விக்ரம்' படம் 43 மில்லியன், 'வலிமை' 33.6 மில்லியன், 'த லெஜன்ட்' 32 மில்லியன், 'வெந்து தணிந்தது காடு' 20 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
'மகான்', 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா', 'டான்', 'விருமன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
விஜய் படங்களின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புகளுக்கும் பாடல்களுக்கும் சமூக ஊடகங்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

