'ரத்த காயங்கள் ஏற்பட்டன'

'ரத்த காயங்கள் ஏற்பட்டன'

3 mins read

காவல்­துறை சம்­பந்­தப்­பட்ட கதை என்­றாலே கதா­நா­ய­கர்­கள் உயர் அதி­கா­ரி­கள் கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்பது­தான் வழக்­கம். ஆனால் 'லத்தி' படத்­தில் காவ­லர் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் விஷால்.

அது மட்­டு­மல்ல, கதைப்­படி ஏழு வயது சிறுவனுக்கு தந்­தை­யா­க­வும் வரு­கி­றார். வித்­தி­யா­ச­மான கதைக்­களம், கதா­பாத்­தி­ரம் என்று கள­மி­றங்கி உள்ள அவரைப் பல­ரும் பாராட்டி உள்­ள­னர்.

"சாதா­ரண காவ­லர் ஒரு­வர் தன் குடும்­பத்­துக்கு பிரச்­சினை என்று வரும்­போது என்ன செய்­கி­றார் என்­ப­து­தான் கதை. எனது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் முருகானந்­தம்.

"இயக்­கு­நர் வினோத்­கு­மார் கதை சொல்­லும்­போது, ஏழு வய­துச் சிறுவ­னுக்கு அப்­பா­வாக நடிக்க வேண்­டும் என்­றார். முழுக் கதை­யை­யும் சொல்­லுங்­கள் என்று கேட்­டேன். வழக்­க­மாக காவல்­துறை சம்­பந்­தப்­பட்ட கதை என்­றால் உயர் அதி­கா­ரி­கள் தொடர்­பா­ன­தாக இருக்­கும். இதில் காவலர் கதா­பாத்­தி­ரத்தை மையப்­ப­டுத்­தும் திரைக்­கதை அரு­மை­யாக இருந்­தது.

"இந்­தப் படத்­துக்­கான எனது உடல்­மொ­ழியை வெளிப்­ப­டுத்­து­வது சவா­லாக இருந்­தது. மேலும் அப்பா, மகன் பாசத்தை விவ­ரிக்­கும் கதை­யா­க­வும் இருந்­த­ப­டி­யால் உடனே சம்­ம­தம் தெரி­வித்­து­விட்­டேன்," என்­கி­றார் விஷால்.

இப்­ப­டத்­துக்­கான சண்­டைக் காட்சி­கள் சவா­லாக இருந்­த­தாகக் குறிப்­பி­டு­பவர், ரத்­தக் காயங்­க­ளை­யும் மீறி அவற்­றில் நடித்­த­தா­கச் சொல்­கி­றார். அனைத்து சண்­டைக் காட்­சி­க­ளுமே சிறப்­பாக பட­மாக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறு­கி­றார்.

சண்­டைக் காட்­சி­களை பீட்­டர் ஹெய்ன் மாஸ்­டர் அமைத்­துள்­ளா­ராம். திட்டமிட்டதை­விட கூடு­தல் நாள்­கள் பணி­யாற்றி அக்­காட்­சி­களை எடுத்து முடித்­துள்­ள­னர்.

"எனக்­குத் தெரிந்து தமிழ் சினி­மா­வில் அதிக நாள்­கள் பட­மாக்­கப்­பட்ட சண்­டைக் காட்­சி­கள் இது­வா­கத்­தான் இருக்­கும். கட்டி முடிக்­கப்­ப­டாத ஒரு கட்­ட­டத்­தில், நடக்­கும் சண்டை விறு­வி­றுப்­பாக இருக்­கும். மிக­வும் ஆபத்­தான அந்­தச் சண்­டைக் காட்­சி­யில் டூப் போடா­மல் நடித்­தேன்.

"படத்­தின் நாய­க­னாக நான் அதில் நடித்­தது பெரிய விஷ­ய­மல்ல. ஆனால் கதைப்­படி எனது மக­னாக, சிறு­வன் ராகவ் நடித்­தது பாராட்­டுக்­கு­ரி­யது.

"படப்­பி­டிப்­பின்­போது பல­முறை எனக்கு ரத்­தக் காயம் ஏற்­பட்­டது. எனி­னும் ஓய்­வின்றி நடித்­தேன். சண்­டைக் காட்­சி­கள் மட்டு­மன்றி யுவன் சங்­கர் ராஜா­வின் பின்­னணி இசை­யும் பேசப்­படும்," என்­கி­றார் விஷால்.

தமி­ழ­கக் காவல்­து­றை­யில் பணி­யாற்­றும் காவ­லர்­களுக்­காக இந்­தப் படத்­தின் சிறப்­புக் காட்சி திரை­யி­டப்­பட உள்­ள­தாம். இதற்­கான முயற்­சி­களை படக்­குழு மேற்­கொண்­டுள்­ள­தாம்.

"இது ஒவ்­வொரு காவ­ல­ரும் குடும்­பத்­தோடு பார்க்க வேண்­டிய படம். அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ரசிக்­கும் வகை­யில் இருக்­கும். ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பார்த்­தாலும் 'சண்­டக்­கோழி', 'இரும்­புத்­திரை', 'பாண்டி­நாடு' படங்­கள் மாதிரி இந்­தப் பட­மும் எனக்­குப் பெருமை சேர்ப்­ப­தாக இருக்கும்.

"ஏற்­கெ­னவே என் படங்­கள் மற்ற மொழி­களில் வெளி­யாகி வரு­கிறது. இந்­தக் கதை மொழி, மாநில எல்­லை­களைக் கடந்து அனை­வ­ருக்­கும் ஏற்­ற­தாக இருக்­கும் என்­ப­தால், கொஞ்­சம் முக்­கி­யத்­து­வம் கொடுத்து வெளி­யி­டப் போகி­றோம்," என்­கி­றார் விஷால்.

நடி­கர் சங்க நிர்­வாகி என்ற வகை­யில் அந்­தப் பொறுப்­புக்­கு­ரிய பணி­க­ளைச் செய்து வரு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தமி­ழ கத்­தில் அனைத்து வச­தி­க­ளு­டன் கூடிய ஒரு திரைப்­பட நக­ரம் அமைக்­கப்­பட வேண்டும் என்­கி­றார்.

"தென்­னிந்­திய சினி­மா­வின் தொடக்­கம் என்­றால் அது சென்­னை­தான். ஆனால் சென்னை­யில் ஒரு திரைப்­பட நக­ரம் இல்லை. தமிழ்ப் படங்­களை எடுக்க வெளி மாநி­லத்­துக்­குத்தான் போக வேண்­டி­யுள்­ளது. எனவே, தமி­ழக அர­சுக்கு இது­தொ­டர்­பாக கோரிக்கை விடுக்­கி­றேன். இது­தொ­டர்­பாக அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லினை விரை­வில் சந்­திப்­பேன்," என்­கி­றார் விஷால்.