அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளில் படத்தின் நாயகி மஞ்சு வாரியரை பலர் கிண்டலடித்துள்ளனர்.
இந்தப் பாடலை வாசகன் என்பவர் எழுதிப் பாடியுள்ளார். மஞ்சு வாரியர் அவருடன் இணைந்து பாடியிருப்பதாக் கூறப்பட்டது.
ஆனால் பாடல் வெளியான பின்னர் அவரது குரலையே காணோம் என்கிறார்கள் ரசிகர்கள். குழுப் பாடகிகள் மத்தியில் மஞ்சுவின் குரலும் ஒலிக்கிறது.
இந்நிலையில், ரசிகர்களின் கிண்டலை தாம் வெகுவாக ரசித்ததாகச் சொல்கிறார் மஞ்சு.
"இப்பாடலில் எனது குரல் கேட்கவில்லையே என்று கவலைப்படுபவர்களின் கவனத்திற்கு, கவலைப்படாதீர்கள், பாடலின் காணொளிப் பதிவுக்காகத்தான் எனது குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"உங்கள் அனைவரது அக்கறைக்கும் நன்றி. என்னைப் பற்றிய வேடிக்கையான பதிவுகளை ரசித்தேன். அனைவருக்கும் என் அன்பு," என்று பதிவிட்டுள்ளார் மஞ்சுவாரியர்.

