தாய்லாந்தில் படப்பிடிப்பு

தாய்லாந்தில் படப்பிடிப்பு

1 mins read
f49068e7-5317-43ae-84fe-269feeffcfe4
-

'பொன்­னி­யின் செல்­வன்' இரண்­டாம் பாகம் எப்­போது வரும் என்று ரசி­கர்­கள் இப்­போதே கேள்வி எழுப்­பத் தொடங்­கி­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், இயக்­கு­நர் மணி­ரத்­னம் அதற்­கான பணி­களை முடுக்­கி­விட்­டுள்­ளா­ராம்.

முதல் பாகத்­தின் பிரம்­மாண்­டம் அடுத்த பாகத்­தி­லும் தொடர வேண்­டும் என்று விரும்­பு­வ­தால், அதற்­கேற்ப அவர் திட்­ட­மிட்டு வரு­வ­தா­கத் தக­வல். குறிப்­பாக கி­ராஃ­பிக்ஸ் தொழில் நுட்­பத்தை அதி­கம் பயன்­ப­டுத்த உள்­ளா­ராம்.

"இரண்­டாம் பாகத்­தின் பல்­வேறு காட்­சி­க­ளைப் பட­மாக்க படக்­கு­ழு­வி­னர் பிப்­ர­வரி மாதம் தாய்­லாந்து செல்­ல­வி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அங்கு திரிஷா, விக்­ரம் சம்­பந்­தப்­பட்ட முக்­கி­யக் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட உள்­ளன.

"அதன் பிறகு தமி­ழ­கத்­தி­லும் சில நாள்­கள் படப்­பி­டிப்பு நடக்கக்­கூ­டும். அதன் பிறகு தொழில்­நுட்­பப் பணி­களில் மணி­ரத்­னம் கவ­னம் செலுத்­து­வார்," என்று விவ­ரம் அறிந்­த­வர்­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது. ஜெயம் ரவி, கார்த்தி ஆகி­யோ­ரி­ட­மும் ஒரு வார காலத்­துக்கு கால்­ஷீட் ஒதுக்­கித் தரும்­படி மணி­ரத்­னம் கேட்­டுள்­ளாராம்.