காற்பந்துக் காய்ச்சல் தமிழ்த் திரையுலகத்தையும் விட்டு வைக்கவில்லை. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, உலகக் கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்துள்ளார்.
கேரள மாநில மக்களுக்கு காற்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். இம்முறை மலையாள திரைக்கலைஞர்கள் பலரும் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை நேரில் காணச் சென்றிருந்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் மம்மூட்டி சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவும் தாம் திடலில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்களுக்காகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கைகூடியது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

