திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
c8866afb-5a89-4e2b-be5a-b4bbf964b5fb
-
multi-img1 of 3

 அரியவகை நோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் சமந்தா, திரையுலகில்

இருந்து விலக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் இரண்டு, தெலுங்கில் இரண்டு உட்பட ஆறு படங்களிலும் இணையத்தொடர்களிலும் அவர் ஒப்பந்தமாகி இருந்தார் சமந்தா. சிகிச்சைக்குப் பின்னர் தம்மால் விரைவில் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில், படங்களின் படப்பிடிப்பை ஒத்தி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டபோது, தயாரிப்பாளர்களும் சம்மதித்தனர். இந்நிலையில், அவருக்கான சிகிச்சை காலத்தை நீட்டிக்க வேண்டியுள்ளதாம். சிகிச்சையின்போதும் அதற்குப் பிறகும் முழுமையான ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே முதற்கட்டமாக இந்திப் படங்களில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்

 வாய்ப்பும் நேரமும் அமைந்தால் உடனே வெளிநாட்டுப் பயணத்துக்குத் தாயராகிவிடுகிறார் ராய் லட்சுமி.

கடந்த ஏப்ரல் மாதம் மாலத்தீவுகளில் விடுமுறையைக் கழித்தவர் இப்போது துபாயில் முகாமிட்டுள்ளார். அங்கு மேற்கொண்ட 'பாலைவன

சஃபாரி'யின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்று ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பாலைவனப் பயணம் என்பது அலாதியான அனுபவங்களைத் தரக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளார் ராய் லட்சுமி.

 'இது உனக்காக அம்மா..' என்று தொடங்கும் 'வாரிசு' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது. குறுகிய நேரத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இப்பாடலை இணையத்தில் கண்டு ரசித்துள்ளனர்.

 தனது சொந்த ஊரில் நடைபெறும் பாரம்பரிய விழாவில் கலந்து கொண்டுள்ளார் அனுஷ்கா. உடல் இளைத்து, அழகு மெருகேறி தோற்றத்துடன் காணப்படும் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

 நடிகைகள் திரிஷாவும்

ஐஸ்வர்யா ராஜேஷும் திரையில் மோத உள்ளனர். இருவரும் நடித்துள்ள புதுப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' வரும் 29ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது. அதே நாளில்தான் திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள 'ராங்கி' படமும் திரை காண்கிறது.

கடந்த ஒரு மாதமாகவே

'தி கிரேட் இண்டியன்

கிச்சன்' படத்துக்கான விளம்பரங்கள் பெரிய

அளவில் மேற்கொள்ளப் பட்டன. அதனால் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள் ளன. புதிதாக திருமணமான இளம்பெண் வேடத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இந்தக் கதாபாத்திரத்துக்கு அவரைவிட பொருத்தமான நாயகியை தேடிக் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை என்கிறார் படத்தின் இயக்குநர்.

'ராங்கி' படத்தைப் பொறுத்தவரை, பல்வேறு தடைகளைக் கடந்து வெளியீடு காண்கிறது. அதனால் திரிஷா ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.