சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது ‘விட்னஸ்’

‘விட்­னஸ்’ திரைப்­ப­டம் அனை­வ­ரின் மன­சாட்­சி­யை­யும் உலுக்­கி­யுள்­ளது என்­கி­றார் இயக்­கு­நர் தீபக்.

கழி­வு­நீர் அகற்­றம், மனி­தக்­கழிவு­களை அகற்­றும்­போது ஏற்­படும் மர­ணங்­கள் குறித்து இந்­தப் படத்­தில் விரி­வாக அல­சப்­பட்­டுள்­ளது. மேலும், இந்த விவ­கா­ரத்­தின் பின்­னணி­யில் உள்ள அர­சி­யல் குறித்­தும் தமது படத்­தில் பதிவு செய்­துள்­ளார் இயக்­கு­நர்.

“பல்­வேறு களங்­களில் பணி­புரிந்­தா­லும் சமூக அக்­கறை என்­பது­தான் என் அடி­நா­த­மாக இருந்­தது. நான் இயக்­கிய குறும்­ப­டத்தை பார்த்த பிறகு முன்­னணி தயா­ரிப்பு நிறு­வ­னம் என்னை ஒப்­பந்­தம் செய்­தது.

“நான் கள­வே­லை­க­ளைத் தொடங்கி மும்­மு­ர­மா­கச் செயல்­பட்டு வந்­தேன். வச­ன­கர்த்தா முத்து­வே­லும் என்­னு­டன் இணைந்­தார். ஆனால் அந்­தப் படம் தொடக்க நிலை­யி­லேயே கைவி­டப்­பட்­டது.

“ஆனா­லும் நான் முயற்­சி­க­ளைக் கைவி­ட­வில்லை. சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­களில் பணி­பு­ரி­யும் தூய்­மைப்­ ப­ணி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னோம். ‘கக்­கூஸ்’ ஆவ­ணப்­பட இயக்­கு­நர் திவ்­ய­பாரதி, மலக்­குழி மர­ணங்­க­ளைப் புகைப்­ப­டங்­கள் மூலம் ஆவ­ணப்­ப­டுத்­தும் பழ­னிக்­கு­மார் ஆகி­யோ­ரின் நட்பு கிடைத்­தது.

“கோவை­யில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு சகோ­த­ரர்­கள் மலக்­கு­ழி­யில் மர­ண­ம­டைந்­த­போது பழ­னிக்­கு­மா­ரு­டன் நான் சென்­றேன். கோவை­யின் மையப்­ப­கு­தி­யில் இருந்து வெள்­ள­லூர் என்ற புற­ந­கர்ப் பகு­திக்கு அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

“இதே­போல் சென்­னை­யி­லும் அடித்­தட்டு மக்­கள் குடி­யேற்­றப்­பட்ட செம்­மஞ்­சேரி பற்றி அறிய விரும்பி­னேன். தன்­னார்வ நிறு­வன ஊழி­யர்­க­ளின் உத­வி­யு­டன் செம்­மஞ்­சேரி குழந்­தை­க­ளுக்­குப் புகைப்­படக் கலை­யைக் கற்­றுக்­கொடுத்துக்­கொண்டே அவர்­க­ளின் வாழ்க்­கையை நான் கற்­றுக்­கொண்­டேன். இது­போன்ற முயற்­சி­களும் சில­ரது உத­வி­யும்­தான் ‘விட்­னஸ்’ படத்தை உரு­வாக்க கைகொ­டுத்­தன,” என்­கி­றார் இயக்­கு­நர் தீபக்.

‘விட்­னஸ்’ படத்­தில் நாய­கி­யாக நடித்­துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்­துக்­கும் சமூ­கத்­தின் மீது மிகுந்த அக்­கறை உள்­ளது என்று குறிப்­பி­டு­ப­வர், கதை­யைக் கேட்ட உட­னேயே அவர் நடிக்கச் சம்­ம­தித்­தா­கச் சொல்­கி­றார். மூத்த நடிகை ரோகி­ணி­யும் படப்­பி­டிப்­பின்­போது நன்கு ஒத்­து­ழைத்­த­தா­கப் பாராட்­டு­கி­றார்.

“முதல்­நாள் மதி­யம் இரண்டு மணிக்­குத் தொடங்­கும் படப்­பி­டிப்பு மறு­நாள் காலை ஆறு மணிக்கு முடிந்­தா­லும் முழு­ம­னத்­து­டன் ஒத்­து­ழைத்­தார் நடிகை ரோகிணி.

“செம்­மஞ்­சேரி மக்­களும் பல காட்சி­களில் நடித்­த­னர். ‘விட்­னஸ்’ பல­பே­ரின் கூட்­டு­ழைப்­பால் உரு­வான படைப்பு. இத்­தனை பேரின் ஒத்­து­ழைப்பு இந்த வெற்­றி­யைச் சாத்­தி­ய­மாக்கி உள்­ளது,” என்று நெகிழ்­கி­றார் தீபக்.

சமூ­கத்­தின் பல தரப்­பைச் சேர்ந்­த­வர்­க­ளின் மௌனங்­களை­யும் இந்­தப் படம் உடைத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிடு­ப­வர், தமது முயற்­சிக்கு கிடைத்­துள்ள அங்­கீ­கா­ரம் மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!