லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அர்ஜுனை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.4 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலை அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் கால்ஷீட் பிரச்சினையால் அவர் தம்மால் நடிக்க இயலாது எனக் கைவிரித்துவிட்டார். அதன் பிறகே அர்ஜுன் ஒப்பந்தமானார்.
கதைப்படி, நாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

