பழம்பெரும் தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார். அவருக்கு வயது 86.
தெலுங்கில் மட்டுமல்லாமல் ஏராளமான தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
தமது அறுபது ஆண்டுகால திரைப்பயணத்தில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்தவர். சிறந்த நடிப்புக் காக ஏராளமான விருதுகளும் பெற்றுள்ளார்.

