சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய் என்கிறார் பூஜா ஹெக்டே. அப்படிச்
செய்திருந்தால் இந்த அளவு வளர்ச்சி கண்டிருக்க இயலாது என்றும் கூறுகிறார். "கதை வலுவாக இருந்தாலும் நான் கேட்கும் ஊதியத்தைத் தராவிட்டால் அந்தப் படத்தில் நான் நடிக்காமல் புறக்கணிக் கிறேன் என்று பரவி உள்ள தகவலில் உண்மை இல்லை. பணத்தை மட்டுமே குறிக் கோளாக வைத்து நான் நடிக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால், எனது திரைப்பயணம் இன்று வரை நீடித்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் தேடிவரும் வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம். நல்ல படங்களைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் நடிகைகளுக்கு உள்ளது. இல்லையெனில் காணாமல் போய்விடுவோம்," என்கிறார் பூஜா.
ரஜினியின் அடுத்த படத்தை 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் எனத் தெரிகிறது. அவர் கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதாகத் தகவல். முன்னதாக சிவ கார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் எனத் தகவல் வெளியானது. எனினும் சிபி கூறிய கதையில் ரஜினி சில மாற்றங்களைச் செய்யச் சொன்னதாகவும் அவ்வாறு செய்த பிறகும் ரஜினிக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரதீப் தனது உதவி இயக்குநர்கள் குழுவுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம்.
தமது பதினைந்தாவது வயதில் திரையுலகில் அறிமுகமானதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தமன்னா. தற்போது திரையுலகில் இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட அவர், மேலும் பல நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க விரும்புவதாகச் சொல்கிறார். "நான் மும்பை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது 15 வயதில் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தேன். முதலில் 'சான்ந் சா ரோஷன் செஹாரா' என்ற இந்திப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானேன். அது தோல்வியைச் சந்தித்தது.
"அதே ஆண்டு தெலுங்கில்
'ஸ்ரீ' என்னும் படத்தில் நடித்தேன். அதுவும் வெற்றி பெறவில்லை. இனி அவ்வளவு தான் என்று நினைத்தபோது 'ஹேப்பி டேஸ்' படம் மூலம் சேகர் கம்முலா என்னை கதாநாயகியாக அறிமுகப் படுத்தினார்.
"அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் பல படங்களில் நடிக்கக் கேட்டு வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கு என தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. பல படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றேன்," என்கிறார் தமன்னா.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கரின் விருதுக் கான பாடல் பிரிவில் இடம் பிடித்துள்ளது. 'ஒரிஜினல்' பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் போட்டியிடும் தகவலை அப்படக்குழுவினர் தெரி வித்துள்ளனர். இதையடுத்து, படக்குழுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட மேலும் பல பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

