திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
88898a01-0556-4892-a2c2-8b1c7c1fb8fa
-
multi-img1 of 3

 நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'அறம்'. கோபி நயினார் இயக்கி இருந்தார். இந்த வெற்றியை அடுத்து, கோபி நயினாரின் அடுத்த படத்திலும் நயன்தாரா நடிப்பார் எனத் தகவல் வெளியானது. அவர் சொன்ன கதை நயன் தராவுக்குப் பிடித்துப் போனதாகக் கூறப்பட்டாலும், கால்ஷீட் ஒதுக்குவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தாராம் நயன்தாரா.அதனால் வேறு வழியின்றி தன் கதையில் நடிக்க ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கோபி நயினார்.

 திடீரென தற்காப்பு கலை தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் சிம்பு. கதாநாயகனாக நடிக்கும் பலர் தற்காப்பு கலைகளில் கவனம் செலுத்துவதுண்டு. இதனால் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்க முடியும். அந்த வகையில் சிம்புவுக்கும் தற்காப்புக் கலைகளில் நாட்டம் உண்டு. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் ஏற்றுள்ள கதாபாத்தி ரத்துக்காக அவர் தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் அடுத்து நடிக்க உள்ள படத்தின் இயக்குநர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ள தாகவும் கூறப்படுகிறது. தற்போது 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்து 'கொரோனா குமார்', ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.

 திரையுலகில் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது வளர்ச்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகச் சொல்கிறார் கல்யாணி பிரிய தர்ஷன். ஒவ்வொரு புதிய ரசிகர் மூலம் ஒரு துளி அன்பு கிடைக்கப் பெற்றாலும் அதற்காக நன்றி தெரிவிப்ப தாகக் கூறியுள்ளார்.

"எனது பயணத்தில் முதல் நாள் தொடங்கி இப்போது வரை உடனிருக்கும் அனைத்து மொழி ரசிகர் களுக்கும் நன்றி. இனி வரும் காலங்களிலும் நீங்கள் உடனிருந்தால் எனது வளர்ச்சி தொடரும்," எனக் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி. தெலுங்கு, தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்து வரும் கல்யாணி தமிழில் 'ஹீரோ, மாநாடு' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

, :   