பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தில் இருந்து விலகிவிட்டார் சூர்யா.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் அவர் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
'வாடிவாசல்' படத்துக்காக சூர்யா வழக்கத்தைவிட கூடுதல் கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். இந்நிலையில் சூரியை வைத்து இயக்கும் 'விடுதலை' படத்தில் கூடுதல் கவனம் செலுத்தினாராம் வெற்றிமாறன்.
இதனால் சூர்யாவுக்கு வருத்தம் ஏதுமில்லை. மாறாக, தனக்குக் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் 'வாடிவாசல்' படம் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது.
இதை வெற்றி மாறனோ, சூர்யாவோ அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஒருசிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவதாகவும் 'வாடிவாசல்' படம் கைவிடப்படவில்லை என்றும் தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.