சாதியால் ஏற்படும் அவதிகளைச் சித்திரிக்கும் வகையில் உருவாகி உள்ளது 'தமிழ்க்குடிமகன்'. இப்படத்தை கார்வேந்தன் இயக்கி உள்ளார்.
இயக்குநர் சேரன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் சுவரொட்டி அண்மையில் வெளியாகி, பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் சாதியால் ஒரு குடும்பம் அவதிப்படுவதைக் காட்சிப்படுத்தி உள்ளனர்.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் சாதிப் பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர். இந்தப் படத்தில் சேரனின் நடிப்பு அசத்தலாக உள்ளதாம்.

