ஏ.ஆர்.ரகுமான் குழுவில் உள்ள இசைக் கலைஞர்களில் முக்கியமானவர் டிரம்ஸ் சிவமணி. உலகம் முழுவதும் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், டிரம்ஸ் கலைஞரான சிவமணி இப்போது திரைப்பட இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
விவேக் கே.கண்ணன் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெராப், சாரா நடிக்கும் 'கொட்டேஷன் கேங்' என்ற படத்திற்கு சிவமணிதான் இசை அமைக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது. படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் மும்பையிலும் சென்னையிலுமாக நடைபெற்று வருகிறது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை காஷ்மீர், சென்னை, ஹைதரா பாத், மும்பை ஆகிய இடங்களில் படமாக்கி உள்ளனர்.

