திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
f0a52e75-956c-48ab-beac-b8a81977d5c8
-
multi-img1 of 3

 நேர்மறையான கருத்து களை மட்டுமே தாம் எப்போதும் கவனத்தில் கொள்வதாகக் கூறுகிறார் திரிஷா. தாம் அரசியல் களம் காணப் போவதாகவும் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார். "எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மந்தம் இல்லை. என்னிடம் எப்போது திருமணம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் இது போன்ற கேள்வி களை தவிர்ப்பது நல்லது," என்றும் தாம் நடித்துள்ள 'ராங்கி' பட நிகழ்வில் பேசும்போது திரிஷா குறிப்பிட்டார்.

 தமக்கு ஏற்ற கதாபாத்தி ரங்களை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தாம் வந்துவிட்ட தாக நினைக்கவில்லை என்கிறார் நிதி அகர்வால்.

எனினும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப் படுவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"முக்கியமாக நடனம் தொடர்பான படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்தாலும் ஒன்றுக்கொன்று எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் வியாபார ரீதியாக நிறைய வித்தியாசங்கள் உள்ளன," என்கிறார் நிதி அகர்வால்.

 திரையுலகத்தினர் குறித்து சிலர் சகட்டு மேனிக்கு விமர்சிப்பதாகச் சொல்கிறார் ஷ்ருதி ஹாசன்.

திரையுலகில் அறிமுகமான புதிதில் தாம் உயரமாக இருப்பதாகக்கூட சிலர் விமர்சித்ததாக சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நீ இவ்வளவு உயரமாக இருக்கிறாயே என்று எல்லோரும் வியப்பாக கேட்பார்கள். உன் உயரம் தான் உனக்கு பலவீனம் என்றுகூட சொன்னார்கள். எனக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் சினிமா துறையில் உயரமாக இருக்கும் கதாநாயகர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. எனினும் ஒரு கட்டத்தில் உயரம் என்பது ஒரு பிரச்சினையே அல்ல என்று தெரிந்துவிட்டது. சொல்லப் போனால் எனக்கு உயரம்தான் பலம் என்றாகிவிட்டது. மகேஷ் பாபு, பிரபாஸ் போன்ற நாயகர்களுடன் இணைந்து ஜோடியாக நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்ததற்கு காரணமே எனது உயரம்தான்," என்கிறார் ஷ்ருதி.

 ஆஸ்‌திரியா நாட்டில் தேனிலவு கொண்டாடி வருகிறார் ஹன்சிகா. அங்கு பல்வேறு இடங்களில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.