'மாவீரன்' படத்தின் கதை கசிந்தது

'மாவீரன்' படத்தின் கதை கசிந்தது

1 mins read

மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் கேலிச்சித்திர ஓவியர் கதாபாத்திரத்தில் நடிப்ப தாகக் கூறப்படுகிறது. 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். நாயகியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. கேலிச்சித்திர ஓவியரான சிவகார்த்திகேயன் எதை வரைந்தாலும் அது அவரது நிஜ வாழ்க்கையிலும் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதுதான் கதையாம்.