தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக தயாரிப்பு நிர்வாகியாக இருந்த உல்லாஷ் சங்கர், '1982 அன்பரசின் காதல்' என்ற படத்தின் மூலம் இயக்குநராகி உள்ளார்.
மேலும், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தும் இருக்கிறார்.
அவருடன் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ் சிவப்பிரகாசம் ஆகியோரும் திரையில் தோன்ற உள்ளனர். ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவைக் கவனிக்க, எஸ். சிந்தாமணி இசையமைத்துள்ளார்.
"கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலிக்கிறான். அந்தப் பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயற்சி செய்கிறான். ஆனால் அது சாத்தியமாகாமல் போகிறது. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும் கேலியும் செய்கின்றனர்.
"மனம் தளராத அன்பரசு காதலி வசிக்கும் கேரள மாநிலத்துக்கே சென்று அவளிடம் காதலைக் கூற முற்படும்போது திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது.
"இதனால் அதிர்ச்சியின் உச்சத் திற்குச் செல்லும் அன்பரசு காதலி யைச் சந்தித்தானா, தன் காதலை சொன்னானா என்பதை கதைக் களமாக்கி இந்த படம் உருவாகி உள்ளது.
"காதல் உணர்வுகளை சரியாகக் காட்சிப்படுத்தினால் தமிழ் ரசிகர் களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். நாங்கள் வெற்றி பெறுவோம்," என்கிறார் சங்கர்.

