சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் கமல். மோகன் லால் நடிக்கும் புதுப் படத்துக்கு 'மலைக்கோட்டை வாலிபன்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
கடந்த 2009ஆம் ஆண்டு கமல் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கமல் தற்போது நடித்து வரும் 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார்.

