'காலில் விழாத குறையாக கெஞ்ச வைத்தார் சரண்யா'

'காலில் விழாத குறையாக கெஞ்ச வைத்தார் சரண்யா'

1 mins read
bc655ca8-1f24-48ac-9abc-c642346ff2bb
-

தான் நடித்­துள்ள திரைப்­ப­டத்தின் இசை வெளி­யீட்டு விழா­வில் பங்­கேற்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கு ஆளாகி உள்­ளார் சரண்யா பொன்­வண்­ணன்.

வி.ராஜா தயா­ரித்து, கதா­நா­ய­க­னாக நடித்­துள்ள படம் 'அருவா சண்ட'.

'சிலந்தி', 'நினை­வெல்­லாம் நீயடா' ஆகிய படங்­களை இயக்­கிய ஆதி­ரா­ஜன் இப்­ப­டத்தை இயக்­கி­யுள்­ளார். இவ்­வா­ரம் திரை­காண உள்­ளது.

இப்­ப­டத்­தின் இசை வெளி­யீட்டு விழா சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இதில் பேசிய படத்­தின் தயா­ரிப்­பா­ள­ரும் நாய­க­னு­மான ராஜா, படத் தயா­ரிப்­பின் மூலம் பல்­வேறு பாடங்­க­ளைக் கற்­றுக்கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

"உயிரைக் கொடுத்து இந்த விழாவை நடத்­து­கி­றோம். இந்த விழா­வில் நாயகி மட்­டு­மல்ல, படத்­தில் அவ­ருக்கு அம்­மா­வாக நடித்­துள்ள சரண்யா பொன்­வண்­ண­னும் வர­வில்லை.

"இத்­த­னைக்­கும் சரண்­யா­வின் காலில் விழாத குறை­யாக விழா­வுக்கு அழைத்­தும் மறுத்து­விட்­டார். பெரிய படம், பெரிய தயா­ரிப்­பா­ளர் என்­றால் அந்த நிகழ்ச்­சிக்கு போயி­ருப்­பார்.

"சிறிய படத் தயா­ரிப்­பா­ளர்­களை கேவ­ல­மாக நினைக்­கிறார்­கள். இந்­தப் படத்­திற்­காக நிறைய கஷ்­டப்­பட்­டி­ருக்­கி­றேன், காயப்­பட்­டி­ருக்­கி­றேன். கண்­ணீ­ரில் ரத்­தம் மட்­டும்­தான் வர­வில்லை," என்றார் தயா­ரிப்­பா­ளர் ராஜா.