அனுபமா பரமேஷ்வரன் நடித்த அண்மைய படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து அவர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
அனுபமாவும் கன்னட நாயகன் நிகிலும் இணைந்து நடித்த 'கார்த்திகேயா 2' படம் வசூலைக் குவித்தது. இதையடுத்து இதே ஜோடி நடித்த '18 பேஜஸ்' படமும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அனுபமாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதுவரை ரூ.60 லட்சம் பெற்று வந்த அவர் புதுப்படங்களில் நடிக்க ரூ.1.20 கோடி சம்பளம் கேட்கிறாராம்.
'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படம் 'கஸ்டடி'. ஒரே சமயத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகிறது. இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கும் இப்படத்தில் நாயகன் நாக சைதன்யா காவல் துறை அதிகாரி கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அதிக பொருட்செலவில் உருவாகிறது. இதில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க, பிரியா மணி, சரத்குமார், சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடிக்கின்றனர். இப்படம் எதிர்வரும் மே 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
மக்கள் தரமான படங்களை மட்டுமே பார்த்திருந்தால் தம்மால் ஐம்பது படங்களை இயக்கி இருக்க முடியும் என்று இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தை இயக்கி வருகி றார் தங்கர் பச்சான். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ராமேசுவரத்தில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருக்கிறது. "இது வரை பத்து படங்களை இயக்கி இருக்கிறேன். ஒளிப்பதிவு பணிகள் என்று இந்த படத்தை யும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றி இருக்கி றேன். ஓர் இயக்குநர் தாம் நினைப்பதை படமாக எடுக்கும் சூழல் இன்னும் இங்கு உருவாகவில்லை. இந்தப் புதுப்படம் இயல்பான வாழ்க்கையைப் பார்த்த அனு பவத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்கிறார் தங்கர் பச்சான்.
விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது தெரிந்த விஷயம்தான். இந்தப் படம் முழுக்க முழுக்க தன்னுடைய பாணியிலேயே உருவாகப் போகிறது என்றும் 'மாஸ்டர்' படத்திலிருந்து விஜய் 67வது படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்று லோகேஷ் தெரிவித்திருக்கிறார். குண்டர் கும்பல்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய், அத்தகைய ஒரு கும்பலின் தலைவராக, ஐம்பது வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
படத்தில் அடிதடிக் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறப் படுவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

