காதல் பாடல்: சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா

காதல் பாடல்: சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா

1 mins read
7e2eca8d-82cb-46d5-a83d-f2ae69109c96
-

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களில் மசாலா பாடல்­க­ளின் ஆதிக்­கம் அதி­க­ரித்­து­விட்­டது என்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

'மிஷன் மஜ்னு' இந்­திப் படத்­தின் விழா­வில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்­தித் திரையுலகில்­தான் அரு­மை­யான காதல் பாடல்­கள் உரு­வா­கின்­றன என்று குறிப்­பிட்­டுள்­ளார். அவர் பேச்சு சர்ச்சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"இந்­திப் பாடல்­கள் வெகு­வாக ரசிக்க வைக்­கின்­றன. குறிப்­பாக இந்தி காதல் பாடல்­கள் என்­னைக் கவர்­கின்­றன. இது­போன்ற அரு­மை­யான பாடல்­கள் இந்­தி­யில்­தான் அதி­கம் உரு­வா­கின்­றன.

"ஆனால் தென்­னிந்­தி­யா­வில் மசாலா பாடல்­கள்தான் அதி­கம் வரு­கின்­றன. இந்­தி­யில் எனது முதல் காதல் பாட­லைக் கேட்­கவும் திரை­யில் காண­வும் ஆவ­லாய் உள்­ளேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

அவ­ரது கருத்­துக்கு பலர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். இந்திப் பட வாய்ப்­பு­க­ளுக்­காக அவர் இவ்­வாறு பேசி­யுள்­ள­தாக இணை­ய­வா­சி­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

ஏற்­கெ­னவே கன்­னட திரை­யு­ல­கம் குறித்து ராஷ்­மிகா தெரி­வித்த சில கருத்­து­கள் சர்ச்­சை­யா­கின. இதை­ய­டுத்து அவ­ருக்கு கன்­ன­டப் படங்­களில் நடிக்க தடை­வி­திக்க வேண்­டும் என சிலர் குரல் கொடுத்­த­னர். அந்த சர்ச்சை முடி­வுக்கு வரு­வ­தற்­குள் அடுத்த விவ­கா­ரம் தலை­தூக்கி உள்­ளது.

இதை­ய­டுத்து சில நாள்­கள் எந்த விவ­கா­ரம் குறித்­தும் கருத்து தெரி­விக்க வேண்­டாம் என ராஷ்மி­கா­வின் நலம் விரும்­பி­கள் அவ­ருக்கு அறி­வு­றுத்தி உள்­ள­னர்.