சிறார் எழுத்தாளராக மாறிய 'அப்பாவி' அம்மா

சிறார் எழுத்தாளராக மாறிய 'அப்பாவி' அம்மா

2 mins read

தமிழ் சினிமா கதா­நா­ய­கர்­க­ளின் அம்­மா­வாக பல நடி­கை­கள் நடித்­துள்­ள­னர். ஆனால் ஒரு­சி­லர் மட்டுமே ரசி­கர்­க­ளின் மன­தில் பாச­மான அம்­மாவாக இடம்பிடித்­துள்­ள­னர். அவர்­களில் ஒரு­வர் ஜானகி சபேஷ்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை இள­மை­யான, அப்­பா­வி­யான அம்மா கதா­பாத்­தி­ரம் என்­றால் உடனே ஜான­கியை ஒப்­பந்­தம் செய்­வ­து­தான் தமிழ் இயக்­கு­நர்­க­ளின் விருப்­ப­மாக இருந்­தது.

முப்­ப­துக்­கும் மேற்­பட்ட படங்­களில் அம்­மா­வாக நடித்­துள்ள அவ­ருக்கு சிறார் எழுத்­தா­ளர், கதை சொல்லி ஆகிய முகங்களும் உண்டு.

'தி ஜங்­கிள் ஸ்டோ­ரி­ டெல்­லிங் ஃபெஸ்­டி­வல்', 'பாட்­டி­யின் ரசம்' என்ற இரு கதைப் புத்­த­கங்­கள் மூலம் தனது மற்ற திற­மை­க­ளை­யும் வெளிப்­ப­டுத்தி உள்­ளார் ஜானகி சபேஷ்.

"இயக்­கு­நர் ராஜிவ் மேன­னின் விளம்­ப­ரப் படம் ஒன்­றில் நடித்­தது­தான் எனது முதல் நடிப்பு அனுபவம். அதன் பிறகு 'மின்­சார கனவு' பட வாய்ப்பு கிடைத்­தது. அதன் மூலம் 'ஜீன்ஸ்' படத்­தில் நடிக்க முடிந்­தது.

"அதன் பிற­கு­தான் இள­மை­யான, நகைச்­சு­வை­யான அம்மா கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றேன். பிறகு அப்­பா­வித்­த­ன­மாக நடித்­த­தும் ரசி­கர்­க­ளுக்­குப் பிடித்­துப் போனது," என்­கி­றார் ஜானகி.

'கில்லி' படத்­தில் விஜய்­யின் அம்­மா­வாக நடித்த பிறகு ஜானகிக்கு பிற மொழி வாய்ப்­பு­களும் தேடி வந்­த­ன­வாம். இப்­போது அதிக படங்­களில் பார்க்க முடி­ய­வில்லை என்­றா­லும் ஜானகி வீட்­டில் முடங்­கி­வி­ட­வில்லை.

"ஒரு கதை சொல்­லி­யா­க­வும் நான் எழு­தும் கதை­கள் மூல­மா­க­வும் சிறார்­கள் என்னை அடை­யாளம் காண்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது. பொது­மக்­க­ளு­ட­னும் குழந்தை­கள் சமூ­கத்­தோ­டும் யாதார்த்­த­மா­கப் பழக முடி­கிறது. அவர்­க­ளின் அன்­புக்கு இணை­யே இல்லை. வாய்ப்பு வந்­தால் நடிப்பை­யும் தொடர்­வேன்.

"நான் எழு­தும் கதை­கள் குறித்து என் மாமி­யா­ரு­ட­னும் கலந்­தா­லோ­சிப்­பேன். அவ­ருக்கு இப்­போது 94 வய­தா­கிறது. அவ­ரு­டைய அனு­ப­வங்­க­ளைக் கேட்க சுவா­ர­சி­ய­மாக இருக்­கும்.

"என் கதை­களில் இடம்­பெ­றும் பாட்­டுக்கு கண­வ­ரும் மக­ளும்­தான் மெட்­ட­மைத்­த­னர். அந்த வகை­யில் குடும்­பத்­தில் உள்­ள­வர்­க­ளின் ஆத­ர­வும் எனக்­குக் கைகொ­டுக்­கிறது," என்­கி­றார் ஜானகி சபேஷ்.

"வாழ்க்கை கொடுக்­கும் வாய்ப்­பு­களை முழு மன­தோடு ஏற்றுச் செயல்­ப­டு­கி­றேன். அவற்­றின் முடிவு எவ்­வாறு அமை­யும் என்­பது குறித்து யோசிப்­ப­தில்லை.

"சிலர் எனது முயற்­சியை அங்கீ­க­ரித்துப் பாராட்­டு­வ­தும் 'சிறார் கதை சிற்பி' விருது பெற்ற­தும் மன­நி­றைவு அளிக்­கிறது," என்­கி­றார் ஜானகி.