'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்களுக்கும் பல்வேறு விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் இருவரது ரசிகர்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் மோதல் நிலவி வருகிறது.
'வாரிசு' படத்துக்கான சுவரொட்டிகளை தென் மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் ஒட்டியுள்ளனர். அவற்றில் சில சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன.
அஜித் ரசிகர்கள்தான் இவ்வாறு செய்துவிட்டதாக விஜய் தரப்பில் சாடப்படுகிறது. ஆனால் அஜித் ரசிகர்களோ சுவரொட்டி கிழிப்புக்கும் தங்களுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என மறுத்துள்ளனர்.
இந்நிலையில் 'வாரிசு' படம் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தி, அஜித் ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி வருவது திரையுலகத்தினரையும் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.
தமிழகத்தின் சில பகுதிகளில் 'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்களும் வெற்றிபெற வேண்டும் எனக் குறிப்பிட்டு, அஜித் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
இவ்விரு படங்களும் திரைகாண்பது தங்களுக்கு இரு பெரு திருவிழா என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

