'நாயகிகளை இழிவுபடுத்த வேண்டாம்'

'நாயகிகளை இழிவுபடுத்த வேண்டாம்'

1 mins read
b54e3ea2-a6b4-4176-88c8-c6a046b30e68
-

தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான நாய­கியை ரசி­கர்­கள் புகழ்­வதில் தவறில்லை என்­றும் அதே­ச­ம­யம் மற்ற முன்­னணி நாய­கி­களை இழி­வு­ப­டுத்­தும் வகை­யில் கருத்­து­கள் தெரி­விப்­பது சரி­யல்ல என்­றும் நடிகை திரிஷா கூறி­யுள்­ளார்.

நயன்­தா­ராவை 'பெண் சூப்­பர் ஸ்டார்' என்று அவ­ரது ரசி­கர்­கள் கொண்­டாடி வரு­கின்­ற­னர். திரி­ஷா­வுக்­குத்­தான் இந்­தப் பட்­டத்தை அளித்­தி­ருக்க வேண்­டும் என ஒரு தரப்­பி­னர் வாதி­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், ஊட­கப் பேட்டி ஒன்­றில் தம்­மை­யும் நயன்­தா­ரா­வை­யும் ஒப்­பிட்­டுப் பேசு­வதை நேர்­ம­றை­யான விஷ­ய­மா­கவே தாம் பார்ப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்­ளார் திரிஷா.

"இரு நடி­கை­களில் ஒரு­வரை இகழ்வதைக் காட்­டி­லும், இரு­வரிடமும் உள்ள தனிச் சி­றப்­பு­க­ளைக் கவ­னித்து ஊக்­க­ம­ளித்­தால் வர­வேற்­பேன்.

"நானும் நயன்­தா­ரா­வும் கிட்­டத்­தட்ட ஒரே சம­யத்­தில்­தான் திரைப் பய­ணத்தை தொடங்கி­னோம். பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். அதனால்தான் இருவரையும் ஒப்பிட்டுப் பேசுவதாகக் கருதுகிறேன்," என்கிறார் திரிஷா.