திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
b08edeb6-9199-4915-b295-23ba873e92b1
-

 'டிரைவர் ஜமுனா' படத்தில் வாடகைக் கார் ஓட்டுநராக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இயல்பான, மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக விமர்சகர்கள் ஐஸ்வர்யாவைப் பாராட்டி உள்ளனர். இந்நிலை யில் படத்தின் விளம்பர நிகழ்வுக்காக வாடகைக் கார், ஆட்டோ ஓட்டும் பெண்களைச் சந்தித்து ஐஸ்வர்யா உரையாடியுள்ளார். நாற்பது பெண் ஓட்டுநர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த ஐஸ்வர்யா, அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, ஆட்டோ ஒன்றை பரிசாக அளித்து, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஓட்டுநராக ஐஸ்வர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினர்.

 நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'கனெக்ட்'. வசூல் ரீதியில் தயாரிப்புத் தரப்புக்கு லாபத்தைக் கொடுத்துள்ளதாம் இப்படம். இதையடுத்து படத்தின் நாயகி நயன்தாரா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்து சென்ற 2022ஆம் ஆண்டு தமக்கு மனநிறைவை அளிக்கக்கூடிய ஆண்டாக அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 'கனெக்ட்' படத்தின் மூலம் ரசிகர்கள் மனநிறைவு பெற வேண்டும் என்பதற்காக அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண் டுள்ளோம். எங்கள் படக்குழு வில் இருந்த அனைவருமே நம்பிக்கையுடனும் நேர்மை யுடனும் பணியாற்றி உள்ளோம். "இந்த படத்தின் இயக்குநரான அஸ்வின் சரவணன் என்னை நம்பியதற்கு நன்றி. அவர் உலகத்தரம் வாய்ந்த படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

 தான் இயக்கியுள்ள 'கிடா' திரைப்படத்துக்கு சென்னை அனைத்துலக திரைப்பட விழா வில் விருது கிடைத்துள்ளதாக அதன் இயக்குநர் வெங்கட் தெரிவித்துள்ளார். ஒரு தாத்தா வுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பை இப்படம் அலசுகிறது.

இதில் 'பூ' ராம், காளி வெங்கட், பாண்டியம்மாள், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "தீபாவளிப் பண்டிகையின் போது ஒரு தாத்தா தனது பேரனுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்க கையில் பணமின்றி கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை விற்க முடிவு செய்கி றார். அதை உள்ளூர்காரர்கள் வாங்க மறுக்க, அந்த ஆடு திடீரென காணாமல் போகி றது. அது கிடைத்ததா என்பதுதான் கதை.