28 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து நடித்த படம்

1 mins read
5597767a-0680-4daf-8124-784f9179820b
-

'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்களும் எதிர்வரும் 11ஆம் தேதி வெளியீடு காண உள்ளன.

தங்­க­ளு­டைய அபி­மான நாய­கன் நடித்த படம்­தான் வசூ­லில் சாதிக்­கும் என அஜித், விஜய் ரசி­கர்­கள் வரிந்து கட்­டி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், 28 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அஜித்­தும் விஜய்­யும் சேர்ந்து நடித்த திரைப்­ப­டம் மீண்­டும் திரை­காண உள்­ளது. 1995ஆம் ஆண்டு இரு­வ­ரும் 'ராஜா­வின் பார்­வை­யிலே' என்ற படத்­தில் இணைந்து நடித்­த­னர். அந்­தப் படம் சென்­னை­யில் உள்ள திரை­ய­ரங்கு ஒன்­றில் இன்று வெளி­யா­கிறது.

என்­ன­தான் திரை­யில் மோதிக் கொண்­டா­லும் அஜித்­தும் விஜய்­யும் நல்ல நண்­பர்­கள் என்­பது இரு­வ­ருக்­கும் நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு நன்கு தெரி­யும்.

அந்த நட்பை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் 'ராஜா­வின் பார்­வை­யிலே' திரை­யி­டப்­ப­டு­கிறது.

இந்த ஏற்­பாட்­டுக்கு இரு­வருமே அனு­மதி வழங்­கி­யுள்­ள­தா­கத் தக­வல்.