'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்களும் எதிர்வரும் 11ஆம் தேதி வெளியீடு காண உள்ளன.
தங்களுடைய அபிமான நாயகன் நடித்த படம்தான் வசூலில் சாதிக்கும் என அஜித், விஜய் ரசிகர்கள் வரிந்து கட்டியுள்ளனர்.
இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடித்த திரைப்படம் மீண்டும் திரைகாண உள்ளது. 1995ஆம் ஆண்டு இருவரும் 'ராஜாவின் பார்வையிலே' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படம் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் இன்று வெளியாகிறது.
என்னதான் திரையில் மோதிக் கொண்டாலும் அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு நன்கு தெரியும்.
அந்த நட்பை வெளிப்படுத்தும் வகையில் 'ராஜாவின் பார்வையிலே' திரையிடப்படுகிறது.
இந்த ஏற்பாட்டுக்கு இருவருமே அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்.

