சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளி யான 'பிரின்ஸ்' படம் எதிர் பார்த்த அளவு வெற்றிபெற வில்லை. இதனால் விநியோ கிப்பாளர்களுக்கு கணிச மான நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த நஷ்டத்தை தன் தோளில் சுமக்க முன்வந்துள்ளார் சிவா. இந்தப் படத்துக்காக தான் பெற்ற ஊதியத்தில் சுமார் மூன்று கோடி ரூபாயை அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல் படத்தின் தயாரிப்புத் தரப்பும் மூன்று கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளது. விநி யோகிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவையான, சராசரிப் பெண்ணாக நடிப்பதில் தமக்கு மிகுந்த விருப்பம் உள்ளது என்கிறார் அதிதி பாலன். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'அருவி' படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த இவருக்கு தொடர்ந்து அதேபோன்ற கதா பாத்திரங்கள்தான் அமைகின் றனவாம். இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தாம் மிக கலகலப்பான இயல்பான குணாதிசயம் உள்ள பெண் என்று கூறியுள்ளார் அதிதி.
"என்னுடைய முழுத் திறமையை யும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கள் அமையவில்லை என்பதில் வருத்தம் உள்ளது. நாயகியை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்றெல் லாம் பிடிவாதம் பிடிக்கவில்லை. வேடிக்கையான, ஜாலியான பாத்திரங்களில் நடிக்கவும் தயார். தற்போது தங்கர் பச்சான் இயக்கும் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்து வருகிறேன். இந்த அனுபவத்தை வார்த்தைக ளில் விவரிக்க இயலாது," என பரவசப்படுகிறார் அதிதி பாலன்.
'கேஜிஎஃப்', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்துள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தியத் திரைத் துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.3,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அல்லூரி இயக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது.
, :
தமிழகத்

