'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலிக்கு சிறந்த இயக்குநர் விருது அளித்து கௌரவித்துள்ளது 'நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம்'.
இதற்கான விருது விழாவில் தன் மனைவியுடன் கலந்து கொண்டார் ராஜமவுலி.
அப்போது பேசிய அவர், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய படத்தை இந்த விருதின் மூலம் ஏராளமானோர் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
"வெளிநாடுகளில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களைப் பார்த்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். மேலும், ஒவ்வொரு ரசிகரின் முகத்திலும் மகிழ்ச்சி, பிரமிப்பு, பரவசம் என பலவிதமான உணர்வுகளைக் காண முடிந்தது.
"இன்றைய நவீன உலகில் பலவிதமான தொழில்நுட்பங்கள் புதிதாக அறிமுகமான வண்ணம் உள்ளன. எனினும் திரையரங்குக்கு நேரில் சென்று படம் பார்க்கும் அனுபவத்தையே விரும்புகிறேன்," என்றார் இயக்குநர் ராஜமவுலி.
'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் இம்முறை ஆஸ்கார் விருதுப் போட்டியில் நேரடியாகப் பங்கேற்கிறது. அதேபோல் 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காகவும் இரண்டு பிரிவுகளில் நேரடியாகப் போட்டியிட தகுதி பெற்றுள்ளது. விருதுகளுக்காக இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

