'ஜெயிலர்' படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டுமே மிச்சம்

'ஜெயிலர்' படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டுமே மிச்சம்

1 mins read
430bb1c2-cf23-4810-8980-8cca86391ca3
-

ரஜினி நடித்து வரும் 'ஜெயி­லர்' படத்­தின் படப்­பி­டிப்பு சுமார் 65 விழுக்­காடு நிறை­வ­டைந்­துள்­ள­தாம். ரஜினி சம்­பந்­தப்­பட்ட காட்சி­கள் மட்­டும் முக்­கால்­வாசி பட­மாக்­கப்­பட்­டு­விட்­ட­தால் படக்­கு­ழு­வி­னர் அனைத்துப் பணி­க­ளை­யும் துரி­தப்­ப­டுத்தி உள்­ள­னர்.

முத்­து­வேல் பாண்­டி­யன் என்ற கதா­பாத்­தி­ரத்­தில் வழக்­கம்­போல் சண்டை, நகைச்­சு­வைக் காட்­சி­களில் அசத்தி உள்­ளா­ராம் ரஜினி. வசந்த் ரவி வில்ல­னா­க­வும் அவ­ரது மனைவி வேடத்­தில் ரவீணா ரவி­யும் நடித்­துள்­ள­னர்.

ஒரே இர­வில் நடக்­கும் கதை இது. அத­னால் ஒவ்­வொரு காட்­சி­யும் விறு­வி­றுப்­பாக இருக்க வேண்­டும் என்­ப­தில் கவ­ன­மாக உள்­ள­தா­கச் சொல்­கி­றார் இயக்கு­நர் நெல்­சன் திலீப்­கு­மார்.

கடந்த டிசம்­பர் மாதம் படப்­பிடிப்புக்கு இடை­வேளை விடப்­பட்­டது. அடுத்து பொங்­கல் பண்­டி­கைக்­குப் பிறகு இறு­திக்­கட்ட படப்­பிடிப்பை சென்­னை­யில் நடத்த உள்­ள­னர். அப்­போது இரண்டு சண்­டைக் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட உள்ளன.

சென்­னைக்கு அருகே உள்ள கட­லூர் மாவட்ட கடற்­க­ரைப் பகுதி­க­ளி­லும் சில காட்­சி­கள் எடுக்­கப்­பட உள்­ள­தா­கத் தக­வல்.

ஏப்­ரல் மாதம் இசை வெளி­யீட்டு விழா­வை­யும் அதன் பிறகு குறு­முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யீட்டு விழா­வை­யும் நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­னர். விரை­வில் இதுகுறித்த அறி­விப்பு வெளி­வ­ரக்­கூ­டும்.